உபதேசம்

உபதேசம் 
      உபதேசம் என்பது ஒரு அனுபவம் பெற்ற குரு, தனது  சீடனுக்கு உண்மையை பற்றி விளக்குவது .அதே சமயத்தில் தனக்கு புரியாத ஒன்றை தகவல் அறிவால்  போதிப்பது கிடையாது. இன்று அனேக மனிதர்கள் போதிய அனுபவம் இன்றியே கடவுளை பூஜிக்க வழிகாட்டுகிறார்கள். கடவுள் என்பது நம்பப்படும் பொருள் என்றே அறிவாளி நினைக்கிறான். அதற்கு ஏதுவாகவே பூசாரிகள், மத போதகர்கள், மற்றும் இரண்டாம்தர ஆன்மீக குருக்கள் செயல்படுகிறார்கள் .
                          ஒன்றை உணர்த்துவதற்கு உணர்ந்தவர் அவசியம் . 
      தமிழ் மொழி உண்மை அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவேதான் அதன் வார்த்தை அமைப்புகள் உண்மையை உணர்த்துவதாக அமைந்து உள்ளது. கொய்யா கனி என்று கொய்த கனிக்கு பெயர் வைத்து உண்மையை அறியும் ஆர்வத்தை மறைத்து வைத்துள்ளர்கள். அது போல் அமைந்த சில வார்த்தைகள் ….
துளை இல்லா –மாதுளை. விளங்கும் – விளாம்  பழம்வாழ  முடியாத-வாழை பழம்.  சிறிதாக இருக்கும் –மாம் பழம்.
       மேலும், குரு என்பவர் ஒரு இடத்தை சுட்டி காட்டி அதன் மேல் கவனத்தை வைக்க சொல்வர் அதற்க்குத்தான் இத்தனை பெயர்களும். தெய்வங்களின்பெயர்களும் ஜாதி பெயர்களும், சில ஊர்களின் பெயர்களும் அவ்விடத்தை சுட்டுகின்றன..
       ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்   -மற்றையான்
       செத்தாருள் வைக்கப் படும் 
 என்று வள்ளுவர் இதையே குறிபிடுகிறார்..  
 அடியேன் உங்களுக்கு உபதேசிப்பது  இதையே ..

        காமத்தை விட புனிதத்தில் சிறந்தது என்பதால் இதை அலட்சியம் செய்தல் கூடாது. மேலும் கமாம் எப்படி மறைமுகமாய் அனுபவிக்கப் படுகிறதோ அப்படி இதையும் கவனமுடன் செய்வது நல்லது.